search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சுடுதல்"

    • இந்தியா 11-17 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் வெய் கியான்- ஜினாவ் லிய் ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது.
    • 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது.

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வருண் தோமர்- ரிதம் சங்வான் இணை 11-17 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் வெய் கியான்- ஜினாவ் லிய் ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.

    வருண் தோமர் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே அவர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

    இதேபோல் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்தியாவின் ரித்ரான்ஷ் பட்டீல்- நர்மதா நிதின் ராஜூ ஜோடி 16-8 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் கியாங்கு ஜாங்- ஹனான் யு இணையை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

    • மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    • கோவை ரைபிள் கிளப்பின் முன்னாள் செயலர் தொடங்கி வைத்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் கடந்த 19-ந் தேதி துப்பாக்கி சுடுதல் பயிற்சி அரங்கம் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி அரங்கத்தை கோவை ரைபிள் கிளப்பின் முன்னாள் செயலர் கே.மருதாசலம் தொடங்கி வைத்தார். பள்ளியின் நிர்வாக அறங்காவலர் கே.ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன், கல்வி ஆலோசகர் டாக்டர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், பள்ளியின் முன்னாள் மாணவி டாக்டர்.பிரியதர்ஷினி மற்றும் முன்னாள் மாணவர் டாக்டர்.கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×